ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : மக்கள் அலறியடித்து ஓட்டம்!!
24 August 2020, 2:12 pmநீலகிரி : கூடலூர் அருகே சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அதிகமாக தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளதால் அடிக்கடி யானைகள் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது.
அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானைகளை விரட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் கூடலூர் அருகே உள்ள நர்த்தகி பகுதியில் ஒற்றை காட்டு யானை சாலையில் கம்பீரமாக நடந்து சென்றது.
இதை கண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்