சாராய பாக்கெட்டை விற்பனை செய்த நபர்… நேரில் பார்த்த போலீஸ் : ஆக்ஷன் எடுக்காமல் வேடிக்கை பார்த்த அவலம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2023, 1:24 pm
சாராய பாக்கெட்டை விற்பனை செய்த நபர்… நேரில் பார்த்த போலீஸ் : ஆக்ஷன் எடுக்காமல் வேடிக்கை பார்த்த அவலம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!!
விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் ஓரம் அமர்ந்து கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக 14 ஆவது வார்டு பகுதி மக்கள் ஏற்கனவே விழுப்புரம் நகர காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வருகை ஓட்டி பாஜகவினர் இலவசமாக வழங்கிய டி ஷர்ட்டை வாங்கி போட்டு கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவலர் ஒருவர் அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார் சாராய பாக்கெட்டுடன் பிடிபட்ட நபரை ஏன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். அந்தக் காவலர் சாராயப் பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
0
0