பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக மண் சாலை : 10 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழலால் மக்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 10:26 am
Sand Bridge - Updatenews360
Quick Share

பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக மண் சாலை : 10 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழலால் மக்கள் அவதி!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில் இருந்து அகரம் சேரி செல்லும் பாலாற்றுக்கு இடையே கிராம மக்களால் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மண் சாலை பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் மேல் ஆலத்தூர் கொத்தகுப்பம் பட்டு உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பள்ளிகொண்டா மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது நிரந்தரமான தரமான தரை பாலம் அமைத்துக் கொடுக்க கோரிக்கை.

இதோடு பல முறை இந்த தற்காலிக மண் சாலை அடித்து செல்லப்பட்டுள்ளது. அகரம் சேரி உள்ளிட்ட கிராம மக்களுக்கான அரசு அலுவலகங்கள் மருத்துவமனை பள்ளிகள் பாலாற்றுக்கு மறுபுறம் உள்ளதால் 1 கிலோமீட்டர் கடக்க வேண்டிய தொலைவை சுமார் 10 கிலோ மீட்டர் வரை சுற்றி கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அகரம்சேரி மேல் ஆலத்தூர் இடையே பாலாற்றில் நிரந்தரமாக தரை பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Views: - 243

0

0