சுதந்திரமே இல்லை.. அண்ணாமலை வந்தால் தான் எல்லாம் நடக்கும்.. பணியை ராஜினாமா செய்த காவலர் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 3:45 pm
Police- Updatenews360
Quick Share

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவர் வேலையை ராஜினாமா செய்வதாக கூறி சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சுதந்திரம் இல்லாமல் இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இந்த தேசத்திற்காகவும், இந்த சமூகத்திற்காகவும் நான் புனிதமாக நேசிக்கும் இந்த காவல் பணியை 77வது சுதந்திர தினமான இன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கொடுப்பதாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இவரது இந்த வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கேணிக்கரை காவல் நிலைய போலீசாரிடம் விசாரித்த போது, கார்த்திகேயனின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என புரியவில்லை, இன்று காலை வரை எல்லோரிடமும் சகஜமாகத்தான் பேசிக்கொண்டு இருந்தார்.

அவர் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற அறிகுறியே அவரிடம் தெரியவில்லை, உங்களைப் போல நாங்களும் அவரது வீடியோவை பார்த்துதான் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கார்த்திக் ராஜினாமா கடிதத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் கொடுப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்ற நிலையில், முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சென்றுள்ளதால், பின்னர் வருமாறு அங்கிருந்த காவலர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணிமுருகேசனை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், வேலையை ராஜினாமா செய்வதாக எடுத்த முடிவு தவறானது. இப்போதைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது.

கட்சியில் இணைந்து தான் சமூகப் பொறுப்பாற்ற வேண்டும் என்று இல்லை. நீங்கள் செய்யும் வேலையிலேயே சமூக பொறுப்புடன் பணியாற்றுங்கள் என தரணிமுருகேசன் அறிவுரை கூறி கார்த்திகேயனை திருப்பி அனுப்பினார்.

Views: - 469

0

0