இன்றும், நாளையும் ட்ரெய்லர் மற்றும் டிப்பர் லாரிகள் ஸ்டிரைக்.. துறைமுகப் பணிகள் முற்றும் நிறுத்தம் ; பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு!

Author: Babu Lakshmanan
13 February 2024, 9:24 am
Quick Share

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுனர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராதத்தை கண்டித்து இன்றும், நாளையும் ட்ரெய்லர் மற்றும் டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ட்ரெய்லர் மற்றும் டிப்பர் லாரிகள் ஈடுபட்டுள்ளன.

இந்த லாரியில் சரக்குகளை ஏற்ற இறக்க துறைமுகத்திற்கு செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தேவையானது சுகாதாரமான குடிநீர் உணவு வசதி கழிப்பிட வசதி குளியலறை வசதி ஆகியவை செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக லாரி ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி துறைமுக நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட முத்து நகர் லாரி ஓட்டுநர் நலச்சங்கம் மற்றும் ஜனநாயக தரைவழி போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் பொது தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் லாரி ஓட்டுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத துறைமுக நிர்வாகத்தை கண்டித்தும், ஓட்டுனர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Views: - 297

0

0