அமைச்சருக்கு பதிலாக நல்ல ஜோதிடராகலாம் ; அமைச்சர் உதயநிதி குறித்து ஜிகே வாசன் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 11:21 am
Quick Share

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதுக்கு பதில் நல்ல ஜோதிடர் ஆகலாம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மற்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் ஏ.சி சண்முகம், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம்… தந்தை முன்பு தூக்கி வீசப்பட்ட குழந்தை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே வாசன் கூறியதாவது :- வேலூர் தொகுதியிலே 25 ஆண்டுகளுக்கு மேல் ஜாதி, மதம், மொழி மற்றும் இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு வாக்காளர்களை கூட்டு குடும்பமாக நினைத்து, அவர்களுடைய வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலே, தொடர்ந்து பதவியில் இருந்தாலும் சரி மற்றும் இல்லாவிட்டாலும் சரி என்று பொதுமக்களுக்கு திட்டங்களை கொடுக்கும் பரந்த உள்ளம் கொண்ட வேட்பாளர் தான் ஏ.சி சண்முகம்.

ஏ.சி சண்முகம் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. வெற்றி வாய்ப்பு என்பது உறுதி என்பது மாற்று கருத்து இல்லை. தமிழ் நாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சுற்று பயணங்கள் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிகளை அதிகரித்து கொண்டு போகிறது. அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

மேலும் படிக்க: ஆமாம், முதல்வருக்கு தூக்கம் போனது உண்மைதான்… ஆனால்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி!!!

மூப்பனார் மறைந்து 23 ஆண்டுகள் ஆகிறது அன்று இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது உள்ள காங்கிரஸ் கட்சி வேறு. மேலும், இன்றைய காங்கிரஸ் கட்சியினுடைய செயல்பாட்டை மூப்பனார் விண்ணில் இருந்து பார்த்தால் அவர் மன்னிக்க மாட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி என்பது உறுதியாக இருக்கிறது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை பொறுக்க முடியாமல் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கள்ள தொடர்பு வைத்து எங்களை தோற்கடிப்பது தான் தற்போது முயற்சி. தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்கிறார். தமிழர்கள் மீது அவருக்கு அதிக மரியாதை இருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்ல ஜோதிடர் ஆகலாம். அமைச்சராக இருப்பதற்கு பதிலாக நல்ல ஜோதிடர் ஆகலாம். இந்தியாவில் எந்த இடத்திலும் அடித்தளம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் போது, பாஜக இந்தியாவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

இ.ந்.தி.யா கூட்டணி என்பது முரண்பாட்டின் மொத்த வடிவம் கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கீறி மற்றும் பாம்பு போல் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி கைகோர்த்து கொண்டிருக்கிறது என்றால் தமிழக மக்களை தயவு கூர்ந்து இ.ந்.தி.யா கூட்டணி ஏமாளியாக நினைக்க வேண்டாம், என தெரிவித்தார்.

Views: - 183

0

0