ஆமாம், முதல்வருக்கு தூக்கம் போனது உண்மைதான்… ஆனால்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி!!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 9:53 am
Quick Share

29 பைசா மோடி, தூத்துக்குடியில் கனிமொழி-யை ஆதரித்து தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை, காரணம் என்ன?

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: ‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!

அப்போது அவர் பேசுகையில், கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் கனிமொழி 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க வேண்டும். தூத்துக்குடியில், வின்ஸ்பாட் தொழிற்சாலை 14,000 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஆயிரம் கோடி மதிப்பில் இன்டர்நேஷனல் பர்னிச்சர் பூங்காவிற்கு நிதி ஒதுக்கி தொடங்கப்பட உள்ளது. 29 கோடி ரூபாய் செலவில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன.

சொல்வதை செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என்று கலைஞர் கூறுவார். அவர் வழியில் வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கண்டிப்பாக சொல்வதை செய்வார், செய்வதை தான் சொல்வார். கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் புயல் வந்தது. அப்போது மக்களுக்கு 6,000 கொடுத்தார். ஆனால், ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதேபோன்று டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பின் போது 10 அமைச்சர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கி இருந்தார்கள்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நலத்திட்ட உதவிகள் கொடுத்து ஒவ்வொரு மக்களையும் அக்கறை காட்டினார். முதல்வர் களத்திற்கு வந்து தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. நீர் நிலைகள் 300 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு 239 கோடி ரூபாய் மதிப்பில் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரு வெள்ளத்தால் உயிரிழந்த 58 பேருக்கு உடனடியாக நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடை உரிமையாளர்களுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணமாக கொடுத்தது தமிழக முதலமைச்சர், ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 145 குடும்பங்களுக்கு 385 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இதுவரைக்கும் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்த்து 2,000 கோடி ரூபாய் அளவிற்கு உதவி தொகை வழங்கியது திராவிட மாடல் அரசு.

நம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மானம் மிகு சுய மரியாதைகாரர்கள் நாம் சர்வாதிகாரி மோடியை எதிர்த்து போட்டியிடுகின்றோம். மோடி இரக்கமற்ற ஒர் சர்வாதிகாரி, புயலுக்கு காசு கொடுக்கவில்லை. நீட் தேர்வினால் 22 குழந்தைகளின் இறந்து போனார்கள் விசாரிக்கவில்லை. கொரோனா நேரத்தில் மக்களை சிறையில் அடைத்து வைத்த மாதிரி வீட்டில் அடைத்து வைத்தார். பலபேர் இறந்தார்கள். துக்கம் விசாரிக்கவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லை ஆலை துப்பாக்கி சூட்டில் எத்தனையோ பேர் சுட்டுக் கொன்றார்கள். முதலமைச்சராக இருந்த எடப்பாடி டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார். மோடி துக்கம் விசாரித்தாரா? எதற்குமே வராத மோடி இப்போது எதற்கு வருகிறார். காரணம் தேர்தல்

கடந்த 2019 ஜனவரி 27 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட் வந்தார். அப்போது, ஒரே ஒரு கல்லை மட்டும் அவர் வைத்தார். பாதம் தாங்கி பழனிச்சாமியும், மோடியும் மதுரையில் அடிக்கல் நாட்டியது ஒத்த கல்லு, அந்த ஒத்த கல்லையும் நான் தூக்கிட்டு வந்து விட்டேன். இப்போது கல்லை காணும் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மருத்துவமனை கட்டி முடிக்கின்ற வரையும் நான் கல்லை திருப்பிக் கொடுக்க மாட்டேன். 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பணம் ஒதுக்கவில்லை.

பாஜக ஆள்கின்ற ஆறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் மீது அவர் வைத்த அக்கறை, ஆனால் தமிழக முதலமைச்சர் கலைஞர் மருத்துவமனை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார். இதுதான் திராவிட மாடல் அரசுக்கும், ஒன்றிய மோடி அரசுக்கும் உண்டான வித்தியாசம்,

மோடிக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன் 29 பைசா இனிமேல் பாஜக காரன் வந்தால் எப்படி இருக்காங்க உங்க 29 காசு என்று கேளுங்கள்.. கேட்பீர்களா? நீங்கள் கேட்க வேண்டும். காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வரி கட்டுகின்றோம். ஒன்றிய அரசு அதை வாங்கி பிரித்து அனைவருக்கும் சமமாக கொடுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து 1 ரூபாய் கட்டினால் வெறும் 29 காசு தான் கொடுக்கின்றார்கள்.

உத்தரபிரதேசம் மாநில தலைவர் யோகி ஆதித்யநாத் பாஜக ஆளுகின்ற மாநிலம் அங்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால் 3 ரூபாய் திருப்பி கொடுக்கின்றது. பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு ரூபாய் கட்டினால் ஏழு ரூபாய் கொடுக்கின்றது. நம் தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறையே இல்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் 29 பைசா, ஆகவே தமிழ்நாட்டு உரிமைகளை யார் மதிக்கிறார்களோ தமிழ்நாட்டிற்கு நிதியை ஒழுங்காக யார் தருகிறார்களோ, அவர் பிரதமராக வர வேண்டும் என்றால், தலைவர் யாரை கை காட்டுகின்றாரோ, அவர்தான் அடுத்த ஒன்றிய பிரதமர்.

மோடி சொல்கின்றார். தமிழ்நாட்டு மக்களுக்கு தூக்கமே போயிருச்சு, முதல்வருக்கு தூக்கம் போயிருச்சு என்று, நீங்கள் ஆட்சியில் இருக்கும் வரை எங்களுக்கு பயமா தான் இருக்கு. தூக்கமே வராது. என்னைக்கு உங்களை தமிழகத்திலிருந்து, இந்தியாவில் இருந்து ஓட, ஓட விரட்டுகிறோமோ, அப்போதுதான் திமுககாரங்களுக்கு தூக்கம், என்றார்.

Views: - 188

0

0