பழனியில் பக்தர்களிடம் அத்துமீறும் திருநங்கைகள் : குவியும் புகாரால் ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 8:48 pm
Trans - Updatenews360
Quick Share

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.

பழனி மலை அடிவாரம், சுற்றுலா வாகன நிறுத்தும் இடங்கள் ,சன்னதி விதி ,கிரிவலப் பாதையில் திருநங்கைகள் ஏராளமானோர் யாசகம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருநங்கைகள் பக்தர்களிடம் இருந்து அதிகளவில் யாசகம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் , திருநங்கைகள் பக்தர்களின் தலை மீது கை வைத்து யாசகம் கேட்பதும் , பக்தர்கள் பணத்தை கையில் எடுக்கும் போது பெரிய பணம் இருப்பதை பார்த்தால் உங்கள் பணத்தை கொடுங்கள் சுற்றி தருகிறோம் என்று தலையில் கை வைத்து கூறிவிட்டு பக்தர்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தராமல் பத்து ரூபாய், அல்லது 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு சென்று விடுவதாகவும், புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் நாகல்நகர் சேர்ந்த இளைஞர் உமா சங்கர் (26) என்ற இளைஞர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது திருஆவின் குடி முன்புறம் அவரை வழிமறித்த இரு திருநங்கைகள் உமா சங்கர் பாக்கெட்டில் இருந்த 200 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தலையில் கை வைத்து சுற்றி தருவதாக கூறிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் , என்னுடைய பணத்தை காவல் துறையினர் மீட்டு தர வேண்டும் என இளைஞர் திரும்ப ஊருக்கு செல்ல கூட பணமில்லை என்று கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அடிவாரம் காவல் துறையினர் பாதிக்கபட்ட இளைஞருடன் சென்று இரு திருநங்கைகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல பக்தரிடம் பணம் பிடிங்கி சென்ற அவந்திகா என்ற திருநங்கையை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இன்றும் இளைஞரிடம் பணத்தை பறித்த திருநங்கைகளை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 290

0

0