இரண்டு வாய், இரண்டு நாக்கு : அதிசய ஆட்டுக்குட்டி!!

20 January 2021, 3:44 pm
Different Goat - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : இரண்டு வாய் இரண்டு நாக்கு கொண்ட அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி கொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஊராட்சி எலத்தகிரி புனித சவேரியார் நகரில் வசித்து வரும் சார்லஸ், சபரியம்மாள் தம்பதியினர் தங்களது வீட்டில் செம்மறிஆடு வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருவுற்றிருந்த செம்மறி ஆடு ஒன்று கடந்த 15ஆம் தேதி அன்று குட்டி ஈன்றது. பிறந்த குட்டிக்கு 2 வாய் மற்றும் 2 நாக்கு உள்ளது. பொதுவாகவே இரண்டு தலை அல்லது இரண்டு கண்களுடன் பிறக்கும் அதிசயக்குட்டியை பற்றி அறிந்திருப்போம்.

ஆனால் இந்த செம்மறி ஆட்டுக்குட்டி வித்தியாசமாக இரண்டு வாய் மற்றும் இரண்டு நாக்கு கொண்டுள்ளதால், இந்த அதிசய ஆட்டுக்குட்டி காண பொதுமக்கள், குழந்தைகள், ஆவலுடன் ஆச்சரியத்தை பார்த்து செல்கின்றனர்.

வித்தியாசமாக அதியசத்தக்க வகையில் பிறந்த ஆட்டுக்குட்டி தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Views: - 0

0

0