தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி… பூப்படைந்த அக்கா மகளுக்கு 12 மாட்டு வண்டியில் வந்திறங்கிய சீர் வரிசை!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 5:04 pm
Seervarisai - Updatenews360
Quick Share

திண்டுக்கல்லில் பூப்புனித நீராட்டு விழாவில் முந்தைய காலங்களில் தமிழகத்தின் பழமை மாறாமல் 12 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்தார். அப்பகுதியில் பொதுமக்கள் கண்டு வியந்து ரசித்தனர்.

திண்டுக்கல் முருக பவனத்தைச் சேர்ந்த ஜெயபால் டீக்கடை தொழிலாளி இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ரம்யாவின் பூப்புனித நீராட்டு விழா, அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஜெயபால் மனைவியின் உடன் பிறந்த சகோதரர்கள் பழனி ரோட்டில் உள்ள லாரி செட் அருகில் இருந்து தாய்மாமன் சீராக 12 மாட்டு வண்டிகளில் பழைய முறை மாறாமலும் தாம்பாள தட்டில் கருப்பட்டி, பழங்கள், பூக்கள், பட்டு புடவைகள், வண்ண சுவை உடைய இனிப்பு வகை பலகாரங்கள், பித்தளை பாத்திரங்கள், இதற்கு மேலாக தாய்மாமன் சீராக ஆடுகள், வாழைத்தார்கள் உள்ளிட்ட பொருள்களை மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலம் ஆக வான வேடிக்கையுடன் தமிழக பாரம்பரியம் மாறாமல் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த பழமையான தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்றதை சாலையில் சென்ற அனைத்து பொதுமக்களும் வியந்து பார்த்து ஆசிரியத்தோடு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Views: - 388

0

0