வரலாறு காணாத மழை… 4 மாவட்டங்களுக்கு மட்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 2:49 pm
ra
Quick Share

வரலாறு காணாத மழை… 4 மாவட்டங்களுக்கு மட்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

வங்க கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உருக்குலைத்து போட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இன்று பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வரலாறு காணாத பெருமழையை கொட்டித் தீர்த்தது. சென்னை மாநகரில் மட்டும் 21 இடங்களில் அதீத கனமழையும் 59 இடங்களில் மிக கனமழையையும் 15 இடங்களில் கனமழையையும் கொட்டித் தீர்த்தது மிக்ஜாம் புயல். சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவரக் கூடாது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அதிகாரிகள் வரை தொடர் அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.

சென்னையில் பாதிப்பு நிலவரம் மிகவும் கவலைக்குரியதாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம், அலுவலகங்களுக்கும் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 166

0

0