தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு : மதுரையில் 90 மையங்களில் பணிகள் நிறுத்தம்!!

9 July 2021, 11:29 am
Vaccine Stop- Updatenews360
Quick Share

மதுரை : தமிழகம் முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் 90 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 6,22,524 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, சமீப காலமாக தடுப்பூசி தட்டுபாடு காரணமாக குறைந்த அளவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 82 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாத காரணத்தால் 90 தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டன.

தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டும் இவ்வேளையில் தடுப்பூசிகள் அதிகப்படியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்

Views: - 148

0

0