வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்… கண்ணாடியை உடைத்த தமிழக இளைஞர் கைது..!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 7:35 pm

சென்னை – மைசூர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயிலுக்கு ‘வந்தே பாரத் ரயில்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயிலானது அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த ரயில்சேவையின் மூலம், தற்போது, டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் இயங்கிவருகின்றன.

இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை – மைசூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவையின் போது தண்டவாளத்தில் மாடுகள் மோதுவம், கல்வீசி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக இருந்தது. மேலும், வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை – மைசூர் சென்ற வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக, தமிழகத்தின் திருமாஞ்சோலையைச் சேர்ந்த குபேந்திரன் (21) எனும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டவாளம் அருகே மத அருந்திக் கொண்டிருக்கும் போது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் குபேந்திரனும், ரயில்மீது கல்வீசியதை ஒப்புக்கொண்டார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!