சோதனையில் சிக்கிய ரூ.6.25 லட்சம் லஞ்சப் பணம்…? பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து அதிரடி!!

Author: Babu Lakshmanan
18 January 2024, 6:02 pm
Quick Share

வேலூர் ; லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளரை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள கிருஸ்டியான்பேட்டை போக்குவரத்து சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வசந்தி. கடந்த 10 ஆம் தேதி வசந்தியின் காரில் இருந்து 3 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 3 லட்சம் ரூபாய் என உரிய ஆவணங்கள் இல்லாத 6 லட்சத்தை 25 ஆயிரம் ரூபாயை வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 581

0

0