அறுவை சிகிச்சை உபகரணங்களை கழுவும் சிறுவன் : அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. !!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 2:27 pm
GH
Quick Share

அறுசை சிகிச்சை உபகரணங்களை சிறுவன் கழுவும் வீடியோ : அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வீடியோ!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. மாறாக பயிற்சி மருத்துவர்கள், மருத்துக்கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

செவிலியர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் டேட்டா என்டரி வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறனர். நோயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும் பணியினைகூட செவிலியர் பள்ளி மாணவிகள்தான் செய்கின்றனர். மருத்துவர்கள் விசிட் என்கிற பெயரில் பார்வையிட்டு செல்கின்றனர்.

நோயாளிகளின் காயங்களை சுத்தம் செய்து கட்டுப்போடும் பயிற்சி மருத்துவர்கள், அந்த நோயாளிகளுக்கு பயன்படுத்திய இரத்தம், சதை படிந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களிடம் கொடுத்து கழுவித் தரச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், காலில் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக வந்த தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியை சார்ந்த பவுல்ராஜ் கூலித்தொழிலாளியின் காயத்தை சுத்தம் செய்த இரத்தம், சதை படிந்த கத்திரிக்கோல் மற்றம் கத்தியை அவரது சுமார் 11 வயது மகன் தனது தகப்பனாருக்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய மகன் இரத்தமும், சதையும் படிந்த கத்தரி மற்றும் கத்தியை கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை. உதாரணமாக சிறுநீரக நோய்களுக்கு இங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலைதான் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். இது போன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், இது குறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

Views: - 328

0

0