மாணவி நந்தினிக்கு விலையுயர்ந்த பரிசளித்த விஜய் – நெகிழ்ந்துபோன பெற்றோர்கள்!

Author: Shree
17 ஜூன் 2023, 12:51 மணி
vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தீவிரமாக அரசியலில் இறங்க அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார். விரைவில் அவர் அரசியலில் அடித்தளமிடவிருக்கிறார். இதற்காக சமூக நலன் சார்ந்த விஷயங்களை தன மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார்.

அந்தவகையில் அண்மையில் +2 , 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதற்காக மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டார்.

இதில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார். .இந்நிலையில் 17ம் தேதி இன்று மாணவர்களை விஜய் சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் இவ்விழா நடைபெற்றது. இதில் 600க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கி அவர்களின் பெற்றோர்களை மெய்சிலிர்க்க வைத்தார் விஜய்.

  • Nithyananda Ranjitha நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன்.. ரஞ்சிதா வெளியிட்ட பகீர் தகவல்!
  • Views: - 329

    0

    0