விருதுநகரில் பயங்கரம்… பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து… 5 பெண்கள் உள்பட 3 பேர் உடல்சிதறி பலி!!

Author: Babu Lakshmanan
9 May 2024, 4:45 pm

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசி அருகே செங்கலாம்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஆலையில் பணியாற்றி கொண்டிருந்தவர்கள் சிக்கினர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வெடிவிபத்தில் சிக்கியர்களை மீட்டனர். இதில், 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க: இதுக்கெல்லாம் கனிமொழி பெருமை படக்கூடாது… திராவிட மாடல் என்பவர்கள் பொங்கி எழாதது ஏன்..? நாராயணன் திருப்பதி கேள்வி

மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பட்டாசு ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை தீயணைப்புத்துறையினரும் அணைத்துள்ளனர். மேலும், வெடி விபத்தில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா..? என்று காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், படுகாயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!