விளவங்கோடு காலி என சீக்கிரமாக அறிவித்த சபாநாயகர்.. திருக்கோவிலூரை மட்டும் கிடப்பில் போட்டது ஏன்? பாஜக கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 7:44 pm
Quick Share

விளவங்கோடு காலி என சீக்கிரமாக அறிவித்த சபாநாயகர்.. திருக்கோவிலூரை மட்டும் கிடப்பில் போட்டது ஏன்? பாஜக கேள்வி!

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் கே.பி ராமலிங்கம், வி.பி துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்

இதையடு்த்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி சபாநாயகர் அப்பாவு நீதிபதியாக செயல்பட வேண்டும் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும் விளவன்கோடு தொகுதியை காலி இடமாக அறிவித்த சபாநாயகர் 60 நாட்கள் ஆகியும் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் தலைவர் சரவணன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

  • KANGUVA கங்குவா படத்திற்கு புதுப்புது சிக்கல்.. என்னதான் பிரச்னை!
  • Views: - 191

    0

    0