கைக்குழந்தையுடன் முன்னாள் காதலனுடன் தஞ்சமடைந்த மனைவி.. காதலன் படுகொலையில் திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 6:45 pm
Murder arrest - Updatenews360
Quick Share

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் குமார் அவரது மகன் சுதாசந்தர் ( வயது22 )இவர் தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார் .

சுதாசந்தர் கடந்த 31ம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் ராகவி என்ற பெண்னுடன் வினாயகபுரத்திலுள்ள ஒரு கடைக்கு சென்று அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றுகொண்டிருந்தபோது வில்லிவாக்கம் சாலையில் ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமடக்கி அந்த பெண்ணின் கண் முன்னே கையில் தயாராக வைத்திருந்த பட்டா கத்தியால் சுதாசந்தரை சரமாரியாக தலை முகம் கழுத்து மார்பு ஆகிய பகுதியில் சரமாரியாக வெட்டி கொன்று அங்கிருந்து கொலையாளிகள் தப்பியோடினர்.

இது குறித்து புழல் காவல் புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் , ராகவி ( வயது 19) என்ற பெண் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் ஆவடி வெள்ளச்சேரியை சேர்ந்த வசந்த் என்பவருடன் திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் தற்போது கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது முன்னாள் காதலரான இறந்த சுதாசந்திரை திருமணம் செய்து கொண்டு கடந்த இரு மாதங்களாக வினாயகபுரம் பகுதியில் வசித்து வந்த இவர்களை ராகவியின் உறவினர்கள் கொலை செய்திருப்பதாக தெரியவந்தது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜாராம் உத்திரவின் பேரில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததின் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த ராகவியின் அண்ணண் ஆவடி மோரை வெள்ளச்சேரியை சேர்ந்த ராபின் என்ற பரத் ( வயது 21) அதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா ( வயது 28 ) ராகவியின் சித்தப்பா உதயராஜ் ( வயது 23) அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ( வயது 25) ஆகியோரை கைதுசெய்து அவர்களிடம் இரண்டு பட்டாக்கத்தியையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் ராகவியின் கணவர் வசந்த் மற்றும் அவரது தந்தை
வாசுதேவன் ஆகிய இருவரையும் தேடிவந்த நிலையில் அவர்களை கைது செய்து விசாரணைக்கு பின்னர் புழல் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 413

0

0