நீ எல்லாம் ஒரு அமைச்சர்.. மானங்கெட்ட அமைச்சர் : திமுக கூட்டத்தில் சலசலப்பு.. பாதியில் ஓடிய அனிதா ராதாகிருஷ்ணன்!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 3:17 pm
Anitha
Quick Share

நீ எல்லாம் ஒரு அமைச்சர்.. மானங்கெட்ட அமைச்சர் : திமுக கூட்டத்தில் சலசலப்பு.. பாதியில் ஓடிய அனிதா ராதாகிருஷ்ணன்!

நெல்லை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்சுக்கு ஆதரவாக கூட்டசி கட்சியான திமுக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் திமுக கூட்டணி சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் திமுக நகர செயலாளர் ஜான் கென்னடி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் கூட்டத்தில் திடீர் கைகலப்பு ஏற்பட்டது.

அதாவது திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர்.ஜெகதீஷ் ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி உள்பட சிலரை தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதற்கு சக திமுக நிர்வாகிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களில் பலர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள் எனவே அவர்களை நியமிக்க கூடாது என அமைச்சரை கேட்டுள்ளனர்.

மேலும் மாவட்ட செயலாளர்கள் தான் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் நீங்கள் நியமிக்க கூடாது என கூறினர் அதற்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் ஒன்றும் செய்ய முடியாது நான்தான் பொறுப்பாளர்களை நியமிப்பேன்.

அதற்காக தான் தலைவர் என்னை அனுப்பி உள்ளார் என கடும் கோபத்தில் கூறியுள்ளார்.

இதனால் ஆந்திரமடைந்த திமுக நிர்வாகிகள் சிலர் அமைச்சரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது இதை எடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் கூட்டத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சரை அங்கிருந்து திமுக நிர்வாகிகள் கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர். நீ எல்லாம் ஒரு மந்திரி மானங்கெட்ட மந்திரி என ஒருமையில் பேசியுள்ளனர்.

உடனே அமைச்சர் அங்கிருந்து நைசாக வெளியேறினார் பின்னர் போலீசார் அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர் அதாவது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ராதாபுரம் திசையன்விளை பகுதிக்கு மட்டும் தான் பொறுப்பாளராக கட்சி தலைமை நியமித்ததாக கூறப்படுகிறது ஆனால் அவர் நெல்லை முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னிச்சையாக ஈடுபடுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக மாவட்ட செயலாளர்களை மதிக்காமல் தனி வழியில் பயணிப்பதால் நெல்லலை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அவர் மீது அநிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

இதனால் மாவட்ட செயலாளருக்கு தரப்பினர் கோஷ்டியாகவும் அமைச்சர் தரப்பினர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாகவே இன்றைய கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது ஏற்கனவே நெல்லை மாநகர திமுகவிலும் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது.

மேயர் திமுக கவுன்சிலர்கள் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது இது போன்ற சூழ்நிலையில் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கோஷ்டி பூசல் நிலவுவதால் திமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது இதற்கிடையில் இன்றைய கூட்டத்தில் நடைபெற்ற கைகலப்பு விவகாரம் திமுக தலைமைக்கு சென்றதாக தெரிகிறது.

இதை எடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரின் நெல்லை பொறுப்பு அமைச்சர் தங்கம் தங்கரசு சென்னையில் இருந்து அவசர அவசரமாக விமானத்தில் நெல்லைக்கு கிளம்பியுள்ளார்.

Views: - 247

0

0