கடலில் குளித்த போது இழுத்து செல்லப்பட்ட இளைஞர்கள்…! தனி ஒருவனாக மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டு…!!

Author: kavin kumar
14 February 2022, 4:36 pm

புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்த போது இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை காவலர் ஒருவர் உயிருடன் மீட்டதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (22), சபரிஷ் (24) இவர்கள் தங்கள் நண்பர்கள் உடன் புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, அதன் பின்னர் தலைமை செயலகம் எதிரே உள்ள புதுச்சேரி கடற்கரையில் தங்கள் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்ச ஆலை ஒன்று விஷ்னு, சபரிஷை இழுத்து சென்றுள்ளது.

இதனை கண்ட அவர்களது நண்பர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜனை உதவி அழைத்ததை அடுத்து அவர் சீருடையுடன் கடலில் இரங்கி அலையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை உயிருடன் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைகாக இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பெரிய கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞர்களை துரிதமாக செயல்பட்டு காப்பற்றிய காவலர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!