கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் மர்ம மரணம்? சந்தேகத்தை கிளப்பும் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 6:11 pm
cbe Isha - Updatenews360
Quick Share

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதை ஏன் அந்த நிறுவனம் புகாராக அளிக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும் என இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 22 ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்பவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில்,செம்மேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

அதில் ஈஷா யோகா மையத்தில் உள்ள கொன்றை பில்டிங் முதல் தளத்தில் கொள்ளு ரமணா என்பவர் தூக்கு மாட்டி இறந்து விட்டார் என்றும், தான் அங்கு சென்ற பொழுது பிரேத விசாரணைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்று விட்டார்கள் எனவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே இறந்த கொல்லு ரமணாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தனியார் இடமான ஈஷா வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுக்க வேண்டும் எனவும், ஈஷா மையத்தில் ஏன் யாரும் புகார் கொடுக்கவில்லை என விசாரிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பபட்டுள்ளது.

மேலும் உடலை முதலில் பார்த்த நபர்கள் ஏன் காவல் துறையிடம் புகார் கொடுக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும் எனவும், ஆயிரக்கணக்கானோர் வேலை செய்யும் தனியார் நிறுவனமான ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகள் ஏன் தற்கொலை குறித்து புகார் கொடுக்கவில்லை எனவும் விசாரிக்க வேண்டும் எனவும் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த தற்கொலைக்கும் ஈஷா யோகா மையத்திற்கும் தொடர்பில்லை என காட்டுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் அந்த இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகியும், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளருமான நேருதாஸ் தெரிவித்தார்.

Views: - 546

0

0