மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் சூறையாடல்…. மதுபோதையில் இளைஞர்கள் அட்டகாசம் ; 3 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 9:18 am
Quick Share

மதுரையில் மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அடித்து நொறுக்கி இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடு இல்லாத பொது மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் யோஜனா திட்டத்தின் கீழ், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அடுக்குகளை கொண்ட 320 மாடி கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த 2023 நவம்பர் 23ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் இது திறந்து வைக்கப்பட்டது.

இருப்பினும், குறைந்த அளவில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் காலியாக உள்ளது. குடியிருப்போர்க்கு தேவையான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை தற்போது துவங்கி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் மதுரையிலே கட்டிய இந்த கட்டிடத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதையில் வந்த மர்மகும்பல், வளாகம் முழுவதும் உள்ள ஜன்னல் கதவு குறித்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்கள் எடுத்த வீடியோ மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோ புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த முத்து மணிகண்டன் மற்றும் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு ஆகிய மூன்று பேரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழக அரசால் 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஒரு திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே சேதப்படுத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 227

0

0