மோட்டோரோலா மோட்டோ E40 இந்தியா வரப்போகுது…அம்சங்கள், விலை மற்றும் பல உங்கள் கவனத்திற்கு!!!

Author: Hemalatha Ramkumar
12 October 2021, 6:43 pm
Quick Share

மோட்டோரோலா இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரூ. 10,000 பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது 90Hz டிஸ்ப்ளே, 5,000 mAh பேட்டரி மற்றும் IP52 பாதுகாப்புடன் வருகிறது. மோட்டோ E40 பற்றிய விவரங்கள் இதோ உங்களுக்காக.

மோட்டோ E40 ரூ .9,499 விலையில் வருகிறது மற்றும் 4GB RAM/64GB
ஸ்டோரேஜ் வேரியண்ட் உள்ளது. தொலைபேசி கார்பன் கிரே மற்றும் பிங்க் க்ளே நிறங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.

மோட்டோரோலா மோட்டோ E40 6.5 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித ஆதரவுடன் வருகிறது. இது யூனிசாக் T700 ஆக்டா கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இது 1TB வரை விரிவாக்கக்கூடியது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

கேமராவுக்கு வருகையில், போன் பின்புறத்தில் ஒரு ட்ரிபிள் கேமரா அமைப்புடன் 48MP மெயின் கேமரா, மற்றும் ஒரு ஆழ சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8MP முன் கேமராவும் உள்ளது. 10W சார்ஜிங்கிற்கு USB டைப்-C போர்ட்டுடன் 5,000mAh பேட்டரியும் போனிற்கு கிடைக்கிறது.

பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது மற்றும் தொலைபேசியின் பரிமாணங்கள் 165.1 × 75.6 × 9.1mm ஆகும். அதே நேரத்தில் அதன் எடை 198 கிராம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE ஆதரவு, Wi-Fi 802.11 a/b/g, ப்ளூடூத் 5.0, GPS/A-GPS மற்றும் FM வானொலி ஆகியவை அடங்கும். இது IP52 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. மோட்டோரோலா ஒரு பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் கீயையும் கொண்டுள்ளது.

Views: - 102

1

0

Leave a Reply