ரியல்மி ஸ்மார்ட் டிவி இனி பட்ஜெட் விலையில்… அறிமுகமாகும் புது டிவி!!!

Author: Hemalatha Ramkumar
27 September 2021, 9:02 am
Quick Share

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு மின்னணு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தங்கள் புதிய தயாரிப்புகளில் ஒன்றான realme smart tv neo 32 இன்ச் என்ற ஸ்மார்ட் டிவி ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி வரும் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.14,999 ஆக இந்த நிறுவனம் நிர்ணயித்து உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி யை ஆன்லைனில், realme.com, flipkart போன்றவற்றில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.மேலும், ரியல்மி- ன் பார்ட்னர் ஷோரூம்களிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 32 இன்ச் பேணலை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி ல் 64-bit media tech processor பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதன் படத்தின் தரம் (picture quality)நன்றாக இருக்கும் என இந்த நிறுவனம் கூறி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் பிளே ஸ்டோரை சப்போட் செய்யுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதில் நாம் நமக்கு விருப்பமான இசை, விளையாட்டு, விடியோ சம்மந்தப்பட்ட செயலிகளை (applications) டவுன்லோடு செய்து கொள்ள முடியும். மேலும் இதில் யூடுயுப், ஹங்கமா போன்ற செயலிகள் பிரி லோடெட் ஆக கொடுக்கபட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி இல் டால்பி ஆடியோ டெக்னாலஜி மற்றும் இரண்டு 10 வாட்ஸ் ஸ்பீக்கர் உள்ளது. இவை தெளிவான சத்தத்தை நமக்கு தருகிறது. மேலும் இதில் இரண்டு hdml port,av port,usb வகை போர்ட் மற்றும் லேன் port ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.2.4GHz wi-fi கான வசதியும் உள்ளது.

இதில் இன்பில்ட் க்ரோம் ஸ்கேட் என்ற தொழில்நுட்பம் இருப்பதால் மொபைல் கேம்களை விளையாடவும் ஸ்மார்ட்போன்களில் இருந்து வீடியோக்களை நேரடியாக ஸ்ட்ரீம் செய்யவும் முடியும்.

Views: - 480

1

0