சாம்சங் கேலக்ஸி டேப் A 8.4 (2020) LTE வெளியானது!!

26 March 2020, 3:12 pm
Samsung Galaxy Tab A 8.4 (2020) LTE announced
Quick Share

கேலக்ஸி டேப் A8.4 (2020) உடன் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்வதாக சாம்சங் அறிவித்துள்ளது. இந்த டேப்லெட் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை $279.99 ஆகும், இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.21,300 இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி டேப் 8.4 மோச்சா (Mocha) வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப, சாம்சங் கேலக்ஸி டேப் A8.4 1920 x 1200 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் 8.4 அங்குல WUXGA டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 1.8GHz ஆக்டா கோர் செயலி இயங்கும், இது சாம்சங் எக்ஸினோஸ் 7904 சிப்செட் வேறு எதுவும் இல்லை.

டேப்லெட்டில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக இதன் ஸ்டோரேஜை 512 ஜிபி வரை மேலும் விரிவாக்க முடியும். இந்த டேப்லெட் எல்.டி.இ இணைப்பையும் கொண்டுள்ளது, மேலும் இது ஒற்றை சிம் ஸ்லாட்டுடன் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது.

கேமரா பிரிவில், கேலக்ஸி டேப் A8.4 (2020) ஆட்டோஃபோகஸுடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் வருகிறது, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது. டேப்லெட் ஆன்ட்ராய்டு 9.0 Pie உடன் இயங்குகிறது, அதோடு இது OneUI உடன் இயங்குகிறது.

இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 99 மணி நேரம் மியூசிக் பிளே டைம், 11 மணி நேரம் இணைய பயன்பாடு மற்றும் 12 மணி நேரம் வீடியோ பிளே டைம் ஆகியவற்றை வழங்குகிறது. இணைப்பு முன்னணியில், இது 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 a/b/g/n/ac (2.4 ஜி + 5 GHz), புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பலவற்றை ஆதரிக்கிறது.