தும்மல், இருமலை கேட்டு ஃப்ளூவை கண்டறியும் சிறிய மைக்| கொரோனா போன்ற சூழலை தடுக்க உதவுமா???

22 March 2020, 12:24 pm
Tiny Mic Listens To Cough Sounds To Predict Flu, May Prevent COVID-19 Like Situation
Quick Share

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா 9000 உயிர்களை இதுவரை கொன்றுள்ளது. நமக்கு அருகில் இருப்பவருக்கு தும்மல் அல்லது இருமல் வந்தாலோ நாம் பயந்து விடுகிறோம். ஆனால் எதிர்காலத்தில் ஒரு சிறிய சாதனம் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்து முளையிலேயே கிள்ளி விட உதவினால் எப்படி இருக்கும்…

யூனிவெர்சிட்டி ஆஃப் மசாசூசெட்ஸை (University of Massachusetts சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற் சொல்லப்பட்டதை போன்ற ஒரு சாதனத்தை தான் கண்டுபிடித்துள்ளனர். மக்களின் இருமல் மற்றும் தும்மலை கேட்டு அவர்களுக்கு சுவாச கோளாறு இருக்கிறதா என்பதை அறியும் ஆர்டிஃபீஷியல் இன்டலிஜன்ஸை வடிவமைத்து உள்ளனர்.

ஃப்ளூசென்ஸ் என்ற ராஸ்பெரி Pi இணைக்கப்பட்ட ஒரு மைக்ரோபோன் தான் இந்த சாதனம். இதனோடு தெர்மல் இமேஜிங் கேமரா உள்ளது. மேலும் இது ஒரு சிறிய பெட்டிக்குள் அடங்கி விடுவதனால் இதனை பிற இடங்களுக்கு கொண்டு செல்வது சுலபம். இது ஒரு வகையான நோயை மட்டும் அறிந்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. மருத்துவ பரிசோதனை செய்யப்படாத இடங்களில் ஏற்படும் பல விதமான நோய்களை இந்த சாதனம் கண்டறிய உதவும்.

ஃப்ளூசென்ஸை கண்டுபிடித்தவர்களுல் ஒருவரான தஹிதுர் ரஹ்மான் இது பற்றி கூறுகையில்,”பல மக்கள் கூடும் இடங்களில் கேட்கப்படும் தும்மல் மற்றும் இருமலை பதிவு செய்வதன் மூலம் நோய்கள் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்திட முடியும் என யோசித்தேன்.” 

இந்த சாதனத்தின் முதற்கட்ட பரிசோதனை UMass கேம்பஸில் டிசம்பர் 2018 – ஜூலை 2019 வரை நடைப்பெற்றது. இது சுவாச கோளாறுகளான இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட நோய்கள் பரவி வருவதை ஆரம்ப நிலையிலே காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டது. பரிசோதனையின் போது 21 மில்லியன் பேசப்படாத சாம்பில்கள் மற்றும் 3,50,000 தெர்மல் புகைப்படங்களை ஆராய்ந்தது. 

AI ஆனது அந்த அறையில் இருந்த நபர்களின் எண்ணிக்கையை அறிந்து அவர்களின் தும்மல் மற்றும் இருமலை கேட்டு அங்கு இருந்தவர்களில் எத்தனை சதவீதம் நபர்களுக்கு சுவாச கோளாறு உள்ளது என்பதை கண்டுபிடித்தது. இதனை பரிசோதனை கூடத்தில் சரி பார்த்ததில் சரியான முடிவுகளே பெறப்பட்டது. 

இதற்கு அடுத்து அந்த மெடிக்கல் அறைக்கு வெளியே அந்த சாதனத்தை பயன்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். UMass யை சேர்ந்த ஆன்ட்ரூ லவ்வர்,”இருமல் போன்ற அறிகுறிக்கும் இன்ஃப்ளூயன்சாவிற்கும் தொடர்பு இருப்பது முன்பே தெரிந்த ஒன்று. தற்போது மெடிக்கல் அறைக்கு வெளியே இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்த்து விட்ட பிறகு இதனை பிற இடங்களில் பயன்படுத்த வேண்டும்.” என சொல்கிறார்.

Leave a Reply