Xiaomi 12 சீரிஸ் வெளியீட்டு தேதி வந்தாச்சு தெரியுமா..???

Author: Hemalatha Ramkumar
3 December 2021, 3:34 pm
Quick Share

Xiaomi 12 சீரிஸ், நிறுவனத்தின் அடுத்த பெரிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆகும். தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். இப்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி, முழு Xiaomi 12 சீரிஸ்களும் இந்த மாத இறுதியில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறுகிறது.

Xiaomi 12 முதலில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் எதிர்பார்க்கப்படும் Pro பதிப்பு ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது Xiaomi நிறுவனம் தொலைபேசியின் மூன்று வகைகளையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தலாம் என்று கூறுகிறது. இதில் Xiaomi 12, Xiaomi 12X மற்றும் Xiaomi 12 Pro ஆகியவை அடங்கும்.

இந்த மூன்று ஃபோன்களும் உள்நாட்டில் L3A, L3 மற்றும் L2 என்ற குறியீட்டுப் பெயர் கொண்டவை என்று கூறப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் Xiaomi இன் சமீபத்திய தனிப்பயன் ஆண்ட்ராய்டு ஸ்கின் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 உடன் வரும். MIUI 13 இன் நிலையான பதிப்பைக் கொண்டிருக்கும் முதல் Xiaomi சாதனங்களாகவும் இவை இருக்கும்.

இந்த சீரிஸில் குறைந்தது ஒரு வேரியண்ட் Snapdragon 8 Gen 1 SoC ஐக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Xiaomi 12 Pro ஆக இருக்கலாம்.

Xiaomi 12 சீரிஸ், இந்த மாத இறுதியில் டிசம்பர் 28 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

Xiaomi 12 ஆனது அல்ட்ராவைட் லென்ஸ், பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கேமராவிற்கான 50MP முதன்மை சென்சார் கொண்டிருக்கும் என்று இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு FHD+ டிஸ்ப்ளே, அண்டர்-ஸ்கிரீன் முன் கேமரா மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 199

0

0