உங்க காருக்கு சார்ஜர் வேணுமா? அட குறைந்த விலையில கிடைக்கும் இதை வாங்குங்க!!

18 March 2020, 11:00 am
Xiaomi Mi Car Charger Pro launched in India for Rs 799
Quick Share

சியோமி புதிதாக Mi 18W கார் சார்ஜர் புரோ (Car Charger Pro) எனும் கார் சார்ஜரை ரூ.799 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சார்ஜர் Mi.com வலைத்தளம் மூலமாகவும் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Mi கார் சார்ஜர் புரோ 18W வெப்பச் சிதறலை மேம்படுத்த உயர்தர பித்தளைகளால் செய்யப்பட்ட உலோக பூச்சுடன் வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்யும் வகையில் இரட்டை சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. இது இரண்டு போர்ட் உடன் அறிவார்ந்த விநியோக நுட்பத்துடன் வருகிறது. இந்த புது நுட்பம் இரண்டு போர்ட்களையும் பயன்படுத்தப்படும்போது ஒவ்வொரு சாதனத்திற்கும் சக்தியை விநியோகிக்க அனுமதிக்கிறது.

சார்ஜர் மின்னோட்டத்தின் அதிக வெளியீடு, அதிக-மின்னழுத்தம், சார்ட் சர்கியூட், உயர் வெப்பநிலை மற்றும் மின்காந்த குறுக்கீடு போன்ற நிலைமைகளிலிருந்து பாதுகாக்க பல அடுக்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது மூன்லைட் ஒயிட் எல்இடி இண்டிகேட்டர் கொண்டுள்ளது, இது எந்த லைட்டிங் நிலைமைகளிலும் சார்ஜிங் போர்ட்டை எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.

Mi கார் சார்ஜர் புரோ ஒரு ஸ்மார்ட் IC சிப்பைக் கொண்டுள்ளது, இது சார்ஜருக்கு தேவையான சக்தியை சிறப்பாக விநியோகிக்கிறது, அதிக மின்னோத்துடன் இயங்கும்போது அதன் வெப்பநிலையைத் தானாகவே கட்டுப்படுத்துகிறது.

தயாரிப்பு 12V மற்றும் 24V உள்ளீட்டை ஆதரிக்கிறது. சிங்கிள்-போர்ட் அவுட்புட்: 5V-2.4A / 9V-2A / 12V-1.5A மற்றும் டூயல்-போர்ட் அவுட்புட்: 5V-2.4A. இந்த Mi கார் சார்ஜர் புரோ 18W 61.8×25.8×25.8 மிமீ என்ற அளவீடுகளைக் கொண்டுள்ளது.