அடடே…மின்சாரம் இல்லாமல் வேலை செய்யும் ACயா… செம ஐடியாவா இருக்கே!!!

Author: Hemalatha Ramkumar
15 August 2022, 7:29 pm
Quick Share

AC நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், கோடைக்காலத்தை நினைத்து கூட பார்க்க முடியாது. இது ஒரு புறம் இருக்க, ACயை பயன்படுத்தும் போது மின்சார பில் எகிறி விடும். இப்போது மின்சாரம் இல்லாமல் வேலை செய்யும் AC ஒன்று உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மின்சாரம் தேவையில்லாத “ரேடியேட்டிவ் கூலிங் சிஸ்டம்” கொண்ட குளிரூட்டிகளுக்கு மாற்றாக உருவாக்கியுள்ளனர்.

இந்த “ரேடியேட்டிவ் கூலர்” பூச்சுப் பொருள் கூரைகளில் பயன்படுத்தப்படலாம் என்றும், அவற்றின் மின் நுகர்வுத் தேவைகளுக்குப் பெயர்போன வழக்கமான ஏர் கண்டிஷனர்களுக்கு ஒரு பயனுள்ள மாற்றாக வழங்குவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரேடியேட்டிவ் கூலர்” எப்படி வேலை செய்கிறது?
“செயலற்ற கதிரியக்க குளிரூட்டும் அமைப்புகள் சுற்றுப்புறத்தில் இருந்து உறிஞ்சப்படும் வெப்பத்தை வெளியேற்றும் அகச்சிவப்பு கதிர்வீச்சுகள் மூலம் செயல்படுகின்றன. பெரும்பாலான செயலற்ற கதிர்வீச்சு குளிரூட்டிகள் இரவில் மட்டுமே செயல்படுகின்றன. பகல்நேர செயல்பாட்டிற்கு, இந்த குளிரூட்டிகள் தேவை,” என்று ஐஐடி கவுகாத்தியைச் சேர்ந்த ஆஷிஷ் குமார் சவுத்ரி பிடிஐ மேற்கோளிட்டுள்ளார்.

இருந்தாலும் இதில் ஒரு பிரச்சினை உள்ளது! தற்போது, ​​இந்த குளிரூட்டும் அமைப்புகளால் பகலில் போதுமான குளிர்ச்சியை வழங்க முடியவில்லை. “இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், மலிவு விலையில் மற்றும் அதிக திறன் வாய்ந்த கதிர்வீச்சு குளிரூட்டும் முறையைக் கொண்டு வருவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். அது 2-4 மணி நேரமும் இயங்கக்கூடியது” என்று சவுத்ரி மேலும் கூறினார்.

இந்த முக்கியமான சிக்கலை சரிசெய்வதில் விஞ்ஞானிகள் பணிபுரிந்து வருகின்றனர். அத்தகைய கதிர்வீச்சு குளிரூட்டிகள் எதிர்காலத்தில் கைக்கு வரலாம். அவை வழக்கமான ஏசி அலகுகளுக்கு “கழிவு வெப்பத்தை சுற்றுப்புறங்களுக்குள் கொட்டும்” ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கலாம். இந்த கதிர்வீச்சு குளிரூட்டிகள் பூமியில் உள்ள ஒரு பொருளை “அதிகமான வெப்பத்தை நேரடியாக மிகவும் குளிரான பிரபஞ்சத்திற்கு அனுப்புவதன் மூலம்” குளிர்விக்கின்றன.

Views: - 1932

0

0