அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு : மாவட்ட நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்..!!

7 November 2020, 8:19 pm
arnab goswami - updatenews360
Quick Share

மும்பை : அன்வி நாயக் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ஊடக ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மும்பை : பிரபல செய்தி தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கும், அவரது தாயாரும் கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலைக்கு பிரபல செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் அளித்த புதிய புகாரின் அடிப்படையில், அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டிருந்தார். மேலும், கோஸ்வாமியின் தொலைக்காட்சியில் இருந்து நிலுவைத் தொகை செலுத்தாதது தொடர்பான புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டிற்கே சென்று மும்பை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, மீண்டும் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதனை நிராகரித்த நீதிபதிகள், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினர்.

Views: - 24

0

0