கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம்: ககன்தீப்சிங் பேடி தகவல்…

8 September 2020, 10:43 pm
Quick Share

சென்னை: கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை, எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் அவர்களது வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும். இதற்காக ஆன்லைன் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலியாக ஆவணங்களை தயாரித்து விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன் தீப்சிங் பேடி கூறுகையில், கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கிசான் திட்டத்தில் சுமார் 110 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருக்கலாம். முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Views: - 6

0

0