பேரறிவாளன் விடுதலையில் நியாயம் உள்ளது : அற்புதம்மாளின் கோரிக்கைக்கு நடிகர் பார்த்திபன் ஆதரவு!!

20 November 2020, 12:09 pm
Quick Share

சென்னை : பேரறிவாளனின் விடுதலையில் நியாயமும், தர்மமும் இருப்பதாக நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ‘ரிலீஸ் பேரறிவாளன்’ என்னும் பாடல் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திரையுலக பிரபலங்களான விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்.

தற்போது, ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலையில் நியாமமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி நானும் போராடுகிறேன் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்,” என பதிவிட்டுள்ளார்.

Views: - 0

0

0