மார்ச் முதல் 4 மாதங்கள்…! 1.8 லட்சம் பிரசவங்கள்…! எந்த மாநிலத்தில் தெரியுமா..?

11 August 2020, 7:05 pm
Delivery- updatenews360 (22)-Recovered-Recovered
Quick Share

சென்னை: 4 மாதங்களில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. தமிழகத்திலும் அதன் தாக்கம் மிக அதிகம். தொடக்கத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி தரப்பட்டது.

பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் தவிர மற்ற சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இந் நிலையில் கடந்த மார்ச் முதல் அரசு மருத்துவமனைகளில் 1,80,571 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: 4 மாதங்களில் 67,679 சிசேரியன் பிரசவங்கள் உட்பட 1,80.571 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தைப்பேறு சிகிச்சை மையங்களில் 1,29,206 பிரசவங்கள் நடந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த சிறப்பான சிகிச்சைகளினால் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மார்ச் 2020 முதல்  அரசு மருத்துவமனைகளில் 5 கோடியே 9 லட்சத்து 2,183  புறநோயாளிகள், 27,30,864 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். சிறப்பான சிகிச்சை, அர்ப்பணிப்பு ஆகிய காரணங்களினால் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன என்று கூறினார். 

Views: - 10

0

0