கிசான் திட்ட முறைகேடு விவகாரம்: 101 பேர் கைது…ரூ.105 கோடி மீட்பு….சிபிசிஐடி தகவல்…!!

Author: Aarthi
16 October 2020, 10:53 am
pm kissan - updatenews360
Quick Share

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 3 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி அடையாள அட்டைகளை கொண்டு இணைந்துள்ளதாகவும், மேலும் சுமார் 6 லட்சம் பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், இந்த போலி பயனாளர்கள் மூலம் கோடி கணக்கிலான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையில், இதுவரை அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள் 100 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை ரூ.105 கோடி வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

Views: - 40

0

0