10,12ம் வகுப்பு துணைத் தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியீடு

27 October 2020, 7:33 pm
Public Exam- updatenews360
Quick Share

10 மற்றும் 12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதி, தேர்ச்சிபெறாத மற்றும் வருகை புரியாதவர்கள், தனித்தேர்வர்களுக்கு மறு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 வகுப்புக்கு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும் நடைபெற்றது.

இந்த நிலையில், 10,12ம் வகுப்பு துணைத் தேர்வுகளின் முடிவுகள் நாளையும், 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் அக்.,29 தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு எழுதியவர்கள், தங்கள் முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Views: - 24

0

0