நீட் தேர்வுக்கு படிங்க..! நழுவிய திமுக அரசு : குழப்பத்தில் நிற்கும் எதிர்கால மருத்துவர்கள்…!

13 July 2021, 7:10 pm
neet - updatenews360
Quick Share

நீட் தேர்வுக்கு எதிராக 2017-ம் ஆண்டு முதலே தமிழகத்தில் திமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன.

நீட் தேர்வு ரத்து

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதுபற்றி மிக விரிவாக குறிப்பிட்டிருந்தது.

“திமுக ஆட்சி காலத்தில் பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கைகள் நடைபெற்றன. தற்போதைய மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை தட்டிப் பறித்து இருக்கிறது.

stalin - updatenews360

திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டப் பேரவை கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.

160-வது வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து என்ற தனித் தலைப்பில், இந்த உறுதிமொழியை திமுக அளித்திருந்தது. அதுமட்டுமல்ல, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் மிக முக்கிய 100 வாக்குறுதிகளில் ஒன்றாக, ‘நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்’ என்றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கமிட்டியும்.. குழப்பமும்…

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஏனென்றால் சுமார் 4 லட்சம் மாணவர்களது பெற்றோரின் லட்சியக் கனவு நனவாக கூடிய வாய்ப்பாக இது இருந்ததால் அவர்கள் திமுக கூட்டணிக்கே வாக்களித்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மாணவர்களின் பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

AK RAjan - Updatenews360

இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் பின்னர், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்த ஆண்டு நீட்தேர்வு நடத்தப்பட்டால் என்ன செய்வது? என்று மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பெரும் குழப்பம் அடைந்தனர். கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாயினர்.

தயாராவது தப்பில்லை

இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறும்போது,”இந்த ஆண்டு நீட் தேர்வு 100% இருக்காது. எனினும் தேர்வு நடந்ததால் அதை எதிர்கொள்வதற்காக அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார். அதேநேரம் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக திமுக அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை. பலிக்கவும் இல்லை.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலும் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில்தான் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பயந்ததுபோலவே நடந்துவிட்டது. அதாவது, செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் வேகம் சற்று கட்டப்பட்டிருந்தாலும் இதை கவனத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் நகரங்கள் 155லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டும் இருக்கிறது.

Minister Subramaniam- Updatenews360

நீட் தேர்வு நடத்தப்படும் தேதி பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்ட பின்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறும்போது, “நீட் தேர்வு நடக்கக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம். நீட் தேர்வில் இருந்து 100% விலக்கு பெற்றுத்தரவேண்டும் என்பது எங்களது எண்ணம். இருந்தாலும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தப்பில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தமிழக மாணவர்கள்வேறு வழியின்றி நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

அதேநேரம் கடந்த ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கொண்டுவந்த நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் இந்த ஆண்டும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

eps - updatenews360

இதுபற்றி அரசு பள்ளி மாணவர்கள் கூறும்போது, “நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தபோதிலும் கூட அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் மூலம் கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது. நீட் தேர்வு இல்லாத காலகட்டத்தில் 10 வருடங்களில் மொத்தமே அரசு பள்ளி மாணவர்களுக்கு 205 இடம்தான் கிடைத்தது.

அப்போது தனியார் பள்ளி மாணவர்கள் 30 ஆயிரம் பேர் வரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். இது தவிர ஆயிரக்கணக்கானோர் தங்களது பண பலம் மூலம் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து டாக்டர்களாகவும் ஆகிவிட்டனர்.

NEET_Exam_UpdateNews360

இதுபோன்ற அவல நிலையை தடுத்து அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களும் பெருமளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் விதமாக முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டம் இயற்றியதால்தான் எங்களைப் போன்றவர்களின் டாக்டர் கனவும் நனவாகிறது.

அவர் மட்டும் இந்த சட்டத்தைக் கொண்டு வராமல் போயிருந்தால் தற்போது நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் எங்களைப் போன்ற ஏழை மாணவர்களின் கதி என்னவாயிருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே பகீர் என்கிறது. அந்த வகையில் அரசுப்பள்ளி மாணவர்களும் அவர்களது பெற்றோரும் தங்களது வாழ்நாள் முழுவதும் எடப்பாடி பழனிசாமியை மறக்கவே மாட்டார்கள்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

எளிதானதல்ல

கல்வியாளர்கள் சிலர் கூறும்போது, “நீட் தேர்வை ரத்து செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்கான தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினாலும் கூட, அது நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகம். ஒரு வேளை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தாலும் கூட அதை எதிர்த்து யாராவது சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால், ஏற்கனவே அளித்த தீர்ப்பைத்தான் கோர்ட் உறுதி செய்யும். அதனால் இனி வரும் ஆண்டுகளிலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா?” என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

எனவே கடந்த ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்னும் அருமையான சட்டத்தை திமுக அரசு 10 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கேலியாக அழைப்பது, ஜெய்ஹிந்த் என்னும் தேசிய முழக்கத்தை அவமதிப்பது போன்ற மோதல் போக்கை கடைபிடிக்காமல் இணக்கமான நட்புறவை மேற்கொண்டால் இது சாத்தியமாகும்.

TN Sec- Updatenews360

இல்லையென்றால் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கடைசி வரை கூறி மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விரக்திக்கு உள்ளாக்கும் இக்கட்டான நிலைதான் ஏற்படும்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி பெற்று அதற்கான அத்தனை கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கிவிட்டது. இதன் மூலமும் மருத்துவ படிப்பில் சேர தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 200 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளையும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தினர்.

Views: - 145

0

0

Leave a Reply