தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி

2 February 2021, 1:56 pm
coronavirus_vaccine_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 195 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை போட மத்திய சுகாதாரத்துறை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ம் தேதி முதல் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை மக்களுக்கு மத்திய அரசு செலுத்தி வருகிறது. இதற்காக, மாநிலந்தோறும், தேவைக்கேற்ப கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வருகிறது. தமிழகத்தில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அப்பல்லோ, சிஎம்எஸ் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்தக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவனைகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0