இன்றும், நாளையும் பேருந்துகள் 24 மணிநேரமும் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

8 May 2021, 11:32 am
Quick Share

நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில், இன்றும், நாளையும் 24 மணிநேரமும் பேருந்து சேவை இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கின் போது பல்வேறு கட்டுப்பாடுகளும், சில வழிகாட்டு விதிமுறைகளுடன் சிலவற்றை இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

முழு ஊடங்கிற்கு ஆயத்தமாகும் வகையில் இன்று முதல் இரு தினங்களுக்கு இரவு 9 மணி வரை கடைகள், நிறுவனங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றும், நாளையும் 24 மணிநேரமும் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு பகலாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 117

0

0