2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Author: Babu
5 October 2020, 4:25 pm
nobel prize medical - updatenews360
Quick Share

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை, 3 மருத்துவர்கள் கூட்டாக இணைந்து பெற இருக்கின்றனர்.

உலகில் மிக உயரிய கவுரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த நோபல் பரிசுக்கு 211 தனிநபர்களும், 107 அமைப்புகளும் போட்டியில் உள்ளனர்.

முதற்கட்டமாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோவல் வைரஸ் மற்றும் ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக, ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இயற்பியல் துறைக்கும், 7ம் தேதி வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Views: - 47

0

0