‘அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி’ : முதலமைச்சர் பழனிசாமி டுவிட்..!

Author: Babu
7 October 2020, 4:45 pm
eps cm- updatenews360
Quick Share

சென்னை : தனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு இன்று அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தல் சந்திக்க இருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தற்போது முதலமைச்சராக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை வழிநடத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தேர்வு செய்த கட்சியின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 184

0

0