பரபரப்பான அரசியலில் சூழலில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் : கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை..!!

20 November 2020, 6:37 pm
admk discuss - updatenews360
Quick Share

சென்னை : பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், ஆளும் அதிமுக கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், திமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய விஷயங்கள் மற்றும் தேர்தல் கூட்டணி, பிரச்சாரத்தை எப்போது தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வர உள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Views: - 28

0

0