சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணி : முதற்கட்டமாக துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை

25 February 2021, 11:06 am
army - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்காக முதற்கட்ட மத்திய பாதுகாப்பு படையினர் இன்று சென்னை வந்தனர்.

தமிழக சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைவதால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இருமுறை ஆய்வு செய்து விட்டுச் சென்றுள்ளனர். மேலும், இந்த மாத இறுதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய பாதுகாப்பு படையினர் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதற்கட்டமாக, மத்திய ஆயுதப்படையின் 45 மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக இன்று சென்னை வந்தனர்.

Views: - 10

0

0