80 வயதுக்கு மேலானவர்களுக்கு தபால் வாக்கு… ஆனா, அதுவும் ஆப்சனல்தான் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

22 January 2021, 6:26 pm
Satyabrata Sahoo - updatenews360
Quick Share

சென்னை : 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்கு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- விடுபட்ட பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும். கடந்த தேர்தலில் 3.50 லட்சம் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நடக்கும் தேர்தலில் 4.50 லட்சம் பேரை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சமூக இடைவெளியுடன் வாக்களிக்க வசதியாக, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 93,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகளை பயன்படுத்தலாம். அதுவும் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே அதனை பயன்படுத்திக் கொள்ளலாம், எனத் தெரிவித்தார்.

Views: - 8

0

0