விறுவிறுப்படையும் தேர்தல் களம் : அதிமுக மற்றும் பாமக இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!!

27 February 2021, 1:22 pm
admk - pmk - updatenews360
Quick Share

சென்னை : தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக – பாமக இடையே கூட்டணியை உறுதி செய்யும் விதமாக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.,6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 12ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாமகவின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்திருப்பது, வன்னிய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, அதிமுக – பாமக இடையிலான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் வேகமெடுத்துள்ள நிலையில், தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக-பாமக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக அதிமுக-பாஜக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில் பாஜகவுக்கு 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், 22 தொகுதிகள் ஒதுக்கப்பட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Views: - 14

0

0