திமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..?

27 January 2021, 4:36 pm
Stalin Seeman- Updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத வெறியால், எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக களத்தில் இறங்கி தேர்தல் வேளைகளை செய்து வருகிறது. தமிழகத்தில் முதல் கட்சியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது. முதலில் ஒன்றிணைவோம் வா என்னும் பெயரில் பிரச்சாரத்தை ஆரம்பித்த திமுக, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்… மக்கள் கிராம சபை கூட்டம் என அடுத்தடுத்து வேறு வேறு பெயர்களில் பிரச்சாரங்களை நடத்தினார் ஸ்டாலின்.

இந்த சூழலில், வரும் 29ம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் தலைவர்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலினின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது :- 22 ஆண்டு திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது. திமுக தான் மக்களுக்கு பிரச்சனை. திமுக தோற்றாலே மக்களுக்கு பிரச்சனையில்லை, எனக் கூறினார்.

சீமானின் இந்த பேச்சு திமுகவினரிடைய அதிர்ச்சிக்குள்ளாக்க வைத்தது. ஏற்கனவே, அரசியல் களத்தில் கத்துக்குட்டியான கமல்ஹாசன் முதல், அரசியலுக்கு முழுக்கு போட்ட ரஜினி வரையில் எம்ஜிஆர் ஆட்சியை வழங்குவேன் எனக் கூறி வந்தனர். யாரும் கருணாநிதி ஆட்சியை வழங்குவேன் எனக் கூறவில்லை, காரணம்.. கருணாநிதியின் ஆட்சி முன்மாதிரியானதாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்று தமிழக அரசியல் தலைவர்கள் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.

இந்த நிலையில், சீமானின் இந்த பேச்சினால், மேலும் சில கேள்விகள் திமுக முன்பு வைக்கப்பட்டு வருகிறது.

அதாவது, காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, தமிழகத்தை அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, 22 ஆண்டுகள் ஸ்டாலினின் தந்தையான கருணாநிதியின் தலைமையிலான ஆட்சியே நடந்து வந்தது.

இப்படியிருக்கையில், 22 ஆண்டுகளாக தீர்க்கப்படாத மக்களின் பிரச்சனைகளை, ஸ்டாலினால் எப்படி 100 நாட்களில் தீர்க்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், ஸ்டாலின் வெறும் அரசியலுக்காகவே, இதுபோன்ற கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 0

0

0