உங்கள் தொகுதி.. எங்கள் பார்வை : ஆவடி யாருக்கு?

2 March 2021, 12:24 pm
Aavadi - updatenews360
Quick Share

தற்போது அஇஅதிமுக வின் கே.பாண்டியராஜன் வசம் உள்ள இந்த தொகுதி, வரும் தேர்தலில் என்ன முடிவைத் தரும் என்பதே ஏறத்தாழ 4 இலட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களின் கேள்வி. 2011 தேர்தலில் ஏறத்தாழ 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த அஇஅதிமுக 2016 தேர்தலில் அதை 1,395 வித்தியாசத்தில் ஜெயித்தது கவனத்திற்கு உரியது.

2016ல் ஆற்காடு வீராசாமியின் மின்தடை பெரும் வித்தியாசம் பெற உதவியது. சென்னை மாநகரின் வடமேற்கில் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு மாநகராட்சியாக ஆவடி விளங்குகிறது. ஆவடி மாநகராட்சி பகுதியில் திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயில் உள்ளது.

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனம் இங்கு உள்ளது.வன்னியர் சமூகம் கணிசமாக உள்ளது. படித்தவர்கள் நிறைந்த தொழில் நகரமாக இது இருப்பதால், கட்சிகள் வாக்குறுதிகளை தாண்டி செயல்வடிவம் எடுப்பவர்களை வெற்றி நெருங்கும் என்பதே நிஜம்…

Views: - 14

0

0