24 வயது இளம்பெண்ணால் சக பயணிகளின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து.. நடுவானில் விமானத்தின் கழிவறையில் செய்த காரியம்!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 10:05 am
Quick Share

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரூ வந்த விமானத்தில் பயணித்த 24 வயது இளம்பெண்ணை போலீசாரிடம் விமான நிலைய ஊழியர்கள் போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும்போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக தண்ணீர் ஊற்றி அதனை அணைத்த ஊழியர், கொல்கத்தாவின் சீல்டா பகுதியைச் சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி என்ற 24 வயது இளம்பெண் தான், கழிவறையில் புகைப்பிடித்து விட்டு, சிகரெட் துண்டை எரிந்து விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை சீர்குலைத்ததாக பிரியங்காவை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். விமானத்தில் பிற பயணிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்து உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். அதன்பின்னர், அந்த இளம்பெண்ணை காவலுக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி முழு அளவில் விசாரணையும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆடவர் ஒருவர், குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் விமான பயணிகளுக்கான விதிகளை கடுமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 350

0

0