தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு…! ஆகஸ்ட் 27 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு

15 August 2020, 10:49 am
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க ஆகஸ்ட் 27 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க வேண்டும். இந்த நடைமுறையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றுவது இல்லை.

அப்படி செயல்படாத பள்ளிகள் மீது தமிழக அரசு தரப்பில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காகவே ஆண்டு தோறும் பள்ளி சேர்க்கை எப்போது என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க ஆகஸ்ட் 27 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் 8ம் வகுப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணத்தை செலுத்துகின்றன.

அதற்கான விண்ணப்பங்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. ஆக.27ம் தேதி முதல் செப்டம்பர் 25 வரை பெற்றோர்கள் டவுன்லோடு செய்யலாம்.

அவ்வாறு சேர்க்கப்பட உள்ள பள்ளிகளானது, குழந்தையின் வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 36

0

0