மீண்டும் தூசி தட்டப்படும் 2ஜி முறைகேடு வழக்கு : மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…!

22 September 2020, 10:58 am
Delhi High Court updatenews360
Quick Share

டெல்லி : 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தி.மு.க.வின் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், இது பொதுநலன் சார்ந்த வழக்கு என்பதால் உடனடியாக விசாரணை தேவை எனக் கூறினார். மேலும், கொரோனா காலத்தில் உள்ள விதிகளை கடைபிடித்தே இந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்தரப்பில் வாதாடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒருநாள் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி, 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

Views: - 7

0

0